‘24 மாத சிறை தண்டனை எல்லாம் போதாது’- லாலு பிரசாத்துக்கு ஜாமின் மறுப்பு

லாலு பிரசாத் யாதவ்

உச்ச நீதிமன்றம் லாலு பிரசாத்தின் ஜாமினை மறுத்து இதுகுறித்தான விசாரணையை ராஞ்சி உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும் என உத்தரவிட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

24 மாதகாலம் சிறைத்தண்டனையில் இருந்துள்ளதாக லாலு பிரசாத் சார்பில் சிறப்பு விடுப்பு பெட்டிஷன் போடப்பட்டது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,

“நீங்கள் நான்கு வழக்கின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளீர்கள். தோராயமாக 25 ஆண்டுகாலம் உங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உங்களது விவகாரத்தை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்” என்றது.

லாலு பிரசாத் யாதவுக்காக மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் ஆஜரானார். “ஏன் விடுதலை ஆகக்கூடாது. விடுதலை செய்வதால் என்ன அபாயம் எழப்போகிறது? இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் விதிமுறைகளுக்கு உட்பட்டதுதானே?” என கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் லாலு பிரசாத்தின் ஜாமினை மறுத்து இதுகுறித்தான விசாரணையை ராஞ்சி உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும் என உத்தரவிட்டது.

மேலும் பார்க்க: கருணாநிதி பற்றி ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கண்கலங்கிய கனிமொழி!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Rahini M
First published: