ஹோம் /நியூஸ் /இந்தியா /

திருப்பதியில் 8 நாட்களில் 24 லட்சம் லட்டுக்கள் விற்பனை..!

திருப்பதியில் 8 நாட்களில் 24 லட்சம் லட்டுக்கள் விற்பனை..!

திருப்பதி லட்டு

திருப்பதி லட்டு

tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் 8 நாட்களில் 5 லட்சத்து 68,735 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • tirupati, India

  திருப்பதியில் கடந்த 27 ஆம் தேதி துவங்கிய ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை நடைபெற்ற கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது.

  இந்த நிலையில் 27ஆம் தேதி முதல் நேற்று நான்காம் தேதி வரை 8 நாட்களில் 5, 69,000 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். கருட சேவையில் மட்டும் 81,318 பக்தர்கள் மூலவரையும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கருட சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு வழங்குவதற்காக லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

  இதன் மூலம் எட்டு நாட்களில் 24, 89,481 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. எட்டு நாட்களில் உண்டியலில் ரூபாய் 20,43, 9400 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். 20, 99,000 பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கருட சேவை ஒரு நாள் மட்டும் 7 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் டீ, காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

  Also see... குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

  அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு 3,47,226 பக்தர்களும் , திருமலையில் இருந்து திருப்பதிக்கு 4,47,969 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். இரண்டு லட்சம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலை முடி சமர்ப்பித்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Tirupati brahmotsavam, Tirupati laddu