முகப்பு /செய்தி /இந்தியா / திருமண வரவேற்பில் 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து திடீர் மரணம் : நடனமாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!

திருமண வரவேற்பில் 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து திடீர் மரணம் : நடனமாடிக்கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!

உயிரிழந்த 23 வயது இளம்பெண் ஜோஸ்னா

உயிரிழந்த 23 வயது இளம்பெண் ஜோஸ்னா

திருமண விழாவில் ஆடிக்கொண்டிருந்த 23 வயது இளம்பெண் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

  • Last Updated :
  • Karnataka, India

சமீப காலமாகவே இளம் வயது நபர்கள் மாரடைப்பு போன்ற நோய்களின் காரணமாக திடீரென மரணமடையும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஜாலியாக சிரித்து ஆடிப்பாடி கொண்டிருக்கும்போதே திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

அப்படி ஒரு அதிர்ச்சிக்குரிய மரணம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு விழாவில் அங்கு வந்திருந்த பலரும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி மணமக்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். இதில் மணமக்களின் உறவுக்காரப் பெண்ணான 23 வயது ஜோஸ்னா லூயிஸ் என்பவரும் விழாவில் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்தார். நடனமாடிக்கொண்டிருக்கும்போது ஜோஸ்னா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்தும் அங்கிருந்தவர்கள் பதறிப்போய் இளம்பெண்ணை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோஸ்னா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதுதான் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

top videos

    உயிரிழந்த பெண்ணுக்கு எந்த விதமான உடல்நலக் குறைபாடும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    First published:

    Tags: Dance, Death, Karnataka, Marriage, Viral Video