மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் முகமது குவாசிப் இம்தியாஸ் ஷேக். 23 வயதான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமாப்பிள்ளையான முகமது தனது மனைவியுடன் ராய்கட் பகுதிக்கு ஜனவரி 25ஆம் தேதி தேன்நிலவு சென்றுள்ளார். இவருடன் இரு நண்பர்களும் உடன் சென்றுள்ளனர். மலை வாசஸ்தலமான அங்கு குதிரை சவாரி பிரபலமான சாகச விளையாட்டாக உள்ளது.
புதுமாப்பிள்ளை முகமதுவுக்கு குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. எனவே, முகமது அவரது மனைவி இரு நண்பர்கள் என நான்கு பேரும் குதிரை ஏறி சவாரி செய்துள்ளனர். அப்போது புதுமாப்பிள்ளை முகமதுவின் குதிரை திடீரென கட்டுப்பாட்டை மீறி வேகமாக ஓடத் தொடங்கியது.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்... நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர் கைது!
பதறிப்போன முகமது குதிரையை கட்டுப்படுத்த முயற்சி செய்த நிலையிலும் அது பலன் அளிக்கவில்லை. ஒருகட்டத்தில் பிடியை இழந்து குதிரையில் இருந்து அவர் கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில் பெரிய பாறைகள் இருந்த நிலையில், முகமதுவுக்கு தலையில் படுகாயங்கள் ஏற்பட்டது. அவர் மதேரான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து பின்னர் உயர் சிகிச்சைக்காக உல்ஹஸ்நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து உல்ஹஸ்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போன்ற விபத்துக்கள் இங்கு அடிக்கடி பதிவாகி வருவதாக கூறி காவல் அதிகாரி சேகர் லாவே, குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற விதிமுறை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இதை பின்பற்றாத சுற்றுலாவாசிகள் மற்றும் குதிரைக்காரர்களுக்கு கடும் அபராதம் விதிக்க ஆவண செய்யப்படும் என்றார்.தேன் நிலவுக்காக வந்த 23 வயதே ஆன புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, Honeymoon, Horse riding, Maharashtra