Home /News /national /

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெண்ணை கூலிப்படை வைத்து கொன்ற காதலன்.. கள்ளக் காதலால் விபரீதம்

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெண்ணை கூலிப்படை வைத்து கொன்ற காதலன்.. கள்ளக் காதலால் விபரீதம்

டெல்லியில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை

டெல்லியில் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை

காதலனுக்கு ஏற்கனவே திருமணமானதை தெரிந்துகொண்ட பெண், முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்யக் கோரி நச்சரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    உறவில் இருந்த பெண் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவரை கழுத்து அறுத்து கொலை செய்த காதலன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஆசாத்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர் உடன் வேலை பார்க்கும் உயர் அதிகாரியான அனுஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் உறவு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்தது. அதிகாரி அனுஜ்ஜிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில், இந்த தகவலை அவர் அந்த இளம்பெண்ணிடம் மறைத்துள்ளார். ஒரு கட்டத்தில்  அனுஜ்ஜிற்கு திருமணம் ஆன விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

    இதை அறிந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில், அனுஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னை மணம் முடிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் உண்மையை பொதுவெளியில் உடைத்துவிடுவேன் எனவும் அப்பெண் மிரட்டியுள்ளார்.

    பெண்ணின் நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத அனுஜ் அவரை கொலை செய்ய கூலிப்படையை அணுகியுள்ளார். இதையடுத்து சனிக்கிழமை அன்று அந்த பெண் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது  மாலை 6 மணி அளவில் இருவர் உள்ளே நுழைந்துள்ளனர். ஒருவர் பெண்ணை பிடித்துக்கொண்ட நிலையில் மற்றொருவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இதையும் படிங்க: நொய்டா கட்டடம் இடிப்பு.. ரூ.500 கோடி நஷ்டம்..! கட்டட ஓனர் புலம்பல்

    இந்த கொலை திட்டத்தில் துர்கா மற்றும் சுமித் என்ற இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். சிசிடிவி காட்சிகள், அனுஜ்ஜின் செல்போன் ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகளை 6 மணிநேரத்தில் கண்டுபிடித்த டெல்லி காவல்துறை அனுஜ், துர்கா, பங்கஜ், பவுடி மற்றும் சுமித் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளது. மோனு என்ற குற்றவாளி மட்டும் தலைமறைவாக உள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Delhi, Extramarital affair, Murder

    அடுத்த செய்தி