முகப்பு /செய்தி /இந்தியா / இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணமான பெண்ணை கடத்திய நபர்... ரூ.2 லட்சத்திற்கு விற்று கட்டாய திருமணம் செய்து வைத்த கொடூரம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணமான பெண்ணை கடத்திய நபர்... ரூ.2 லட்சத்திற்கு விற்று கட்டாய திருமணம் செய்து வைத்த கொடூரம்!

திருமணமான பெண் கடத்தல்

திருமணமான பெண் கடத்தல்

திருமணமான பெண்ணை சமூக வலைத்தளத்தில் பழகிய நபர் கடத்தி விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 23 வயது திருமணமான பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார். மாயமான பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், பெண் கடத்தப்பட்டதை அறிந்து கொண்டனர்.

இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் ஒருநபர் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார்.அந்த பெண்ணிடம் நயந்து பேசி நம்பிக்கையை பெற்றுள்ளார். தனக்கு பெரிய இடத்தில் தொடர்பு உள்ளது, உனக்கு காவல்துறையில் வேலை வாங்கித் தருகிறேன் என்று நம்பிக்கை ஊட்டி வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அந்த நபரின் பேச்சை நம்பி பெண்ணும் அதற்கு சம்மதம் தந்துள்ளார்.

வேலைத் தொடர்பாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி பெண்ணை அந்த நபர் வீட்டை விட்டு வெளியே வர வழைத்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து ராஜஸ்தானுக்கு கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பேரம் பேசி பெண்ணை விற்றுள்ளனர். அங்கு அந்த நபருடன் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதற்கிடையில் குடும்பத்தின் புகாரின் பேரில் காவல்துறை நடத்திய துரித விசாரணையின் பேரில் பெண் இருப்பிடம் தெரிந்து அவர் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மட்டும் பிடிபட்ட நிலையில், அவரின் கூட்டாளிகள் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருமணமான பெண்ணை ஒரு கும்பல் வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்ற விற்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Kidnap, Woman