HOME»NEWS»NATIONAL»23 percent increased in four days for tollfee through fastag tmn

ஃபாஸ்டேக் கட்டாயம் : கடந்த 4 நாட்களில் சுங்கக்கட்டணம் வசூல் 23 சதவீதம் அதிகரிப்பு

பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை பிப்ரவரி 15 தேதி முதல் நடைமுறைக்கு வந்ததது.

ஃபாஸ்டேக் கட்டாயம் : கடந்த 4 நாட்களில் சுங்கக்கட்டணம் வசூல் 23 சதவீதம் அதிகரிப்பு
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை
  • Share this:

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமாக வசூலிக்கப்பட்ட கட்டணம் கடந்த 4 நாட்களில் 23 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை பிப்ரவரி 15 தேதி முதல் நடைமுறைக்கு வந்ததது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபாஸ்டாக் மூலமாக வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 102 கோடி ரூபாய் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் பணம் கொடுத்து கட்டணம் செலுத்தும் முறை 10 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by:Tamilmalar Natarajan
First published: