மாநிலங்களவை எம்.பி.க்கள் 23 பேர் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி வலியுறுத்தினர்.
சுகாதார அமைச்சரின் கவனத்தை இதன் மூலம் ஈர்த்து அரிதான மரபணு நோய் குறித்த சிகிச்சையை துரிதப்படுத்தக் கோரியுள்ளனர்.
Group 3(a) என்று அழைக்கப்படும் மரபணு பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கான சிகிச்சைதான் இவர்கள் கோரிக்கை வைத்திருப்பது.
மரபணு நோய்களின் வகைகள்:
ஒற்றை மரபணு நோய் என்பது ஒரேயொரு மரபணு மட்டும் உருமாற்றம் அடையும். ரத்தத்தின் சிகப்பணு நோயான சிக்கிள் செல் அனிமீயா அல்லது ரத்த சோகை நோய் இதற்கு உதாரணம்.
2வது வகை குரோமோசோம்கள் ஒழுங்கின்மை என்று அழைக்கப்படுகிறது. இதில் குரோமோசோம்கள் அல்லது இதன் ஒரு பகுதி மாற்றமடையும் அல்லது காணாமல் போய்விடும். நம் மரபணுவை பிடித்து வைத்திருக்கும் அமைப்புதான் குரோமோசோம்கள்.
3வது வகை மரபணு நோய் என்பது சிக்கல்கள் நிரம்பியது. இதில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மரபணுக்கள் உருமாற்றம் அடைந்திருக்கும். இதில் நம் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பெரும்பங்கு வகிக்கிறது. பெருங்குடல் புற்று நோய் இந்த வகையைச் சேர்ந்தது.
இந்நிலையில் அரியவகை மரபணு நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையை உடனடியாகத் தொடங்க வேண்டி 23 ராஜ்யசபா எம்.பி.க்கள் அளித்த அறிவிக்கையில் கூறபட்டிருப்பதாவது:
2021 அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை குறித்த அறிவிக்கை வந்த பின்பும் இந்த அரிய மரபணு நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய நிதி இல்லை. ஆகவே ராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதியில் இந்த அரிய மரபணு நோயையும் சேர்க்க வேண்டும். குரூப் 3 மரபணு நோயாளிகளை உடனடியாக சிகிச்சை வசதிக்கு மாற்றி முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பாக, புதுவகை மரபணு நோய்கள் மீதான கவனத்தை நாங்கள் ஈர்க்க விரும்புகிறோம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.