2020-ஆம் ஆண்டில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்..

2020-ஆம் ஆண்டில் 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்..

கிஷன் ரெட்டி

பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்தார்.

 • Share this:
  ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 221 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திங்கட்கிழமை மாநிலங்களவை கூடியபோது பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்தார்.
  ஜம்மு-காஷ்மீரில் 2018-ஆம் ஆண்டு 257 பயங்கரவாதிகள், 2019 ஆம் ஆண்டில் 157 பயங்கரவாதிகள், 2020-ஆம் ஆண்டில் 221 பயங்கரவாதிகள், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 3 பயங்கரவாதிகள் என மொத்தம் 638 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.


  மேலும், 2018 முதல் 2021 பிப்ரவரி வரை ஜம்மு காஷ்மீரில் 116 பொதுமக்களும், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து பிறபகுதிகளில் 3 பொதுமக்கள் என மொத்தம் 119 பொதுமக்கள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக இருந்ததாக 42 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பயங்கரவாத செயல்கள் பெரும்பாலும் அண்டைநாட்டின் ஆதரவில் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Gunavathy
  First published:

  சிறந்த கதைகள்