சென்னையை சேர்ந்த டைல்ஸ் நிறுவனம் ரூ.220 கோடி வரி ஏய்ப்பு!

சென்னையை சேர்ந்த டைல்ஸ் நிறுவனம் ரூ.220 கோடி வரி ஏய்ப்பு!

ஐடி சோதனை

வரித் துறைக்கான கொள்கையை உருவாக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி), வாக்காளர்களை கவர பணம் தரப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், சரிபார்க்கவும் முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது.

  • Share this:
சென்னையை சேர்ந்த முன்னணி டைல்ஸ் மற்றும் சானிடரிவேர் தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஐடி சோதனையில் அந்நிறுவனம் 220 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த முன்னணி டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி அன்று வருமான வரி சோதனை நடைபெற்றது. தமிழகம், குஜராத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக குறித்து மத்திய நேரடி வரி வாரியம்(சிபிடிடி) தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி டைல்ஸ், சானிடரிவேர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 8.30 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிறுவனம் தென்னிந்திய அளவில் டைல்ஸ், சானிடரிவேர் விற்பனையில் முன்னனியில் உள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத டைல்ஸ் கொள்முதல் மற்றும் விற்பனை கண்டறியப்பட்டது. கணக்கிடப்படாத பரிவர்த்தனைகளின் விவரங்கள் ரகசிய அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டன மற்றும் மென்பொருளை இண்டர்நெட் கிளவுடில் பராமரித்து வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வருவாயைக் கருத்தில் கொண்டு, ₹120 கோடி அளவில் கணக்கில் காட்டப்படாத வருமானம் இருக்கலாம். மற்றும் இதர ஷெல் நிறுவனங்கள் மூலம் 100 கோடி ரூபாய் இதர வருமானம் கிடைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 220 கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளதாக சிபிடிடி தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து சில இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை நேற்று மாலை வெளியானது.

வரித் துறைக்கான கொள்கையை உருவாக்கும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி), வாக்காளர்களை கவர பணம் தரப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், சரிபார்க்கவும் முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published: