பொய்யான தகவல்களைப் பரப்பிய 22 யூ டியூப் சேனல்களுக்கு தடை (Youtube Channels Ban) விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேச பாதுகாப்பு குறித்து இந்த சேனல்கள் தவறான தகவல்களைப் பரப்பியதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தடை செய்யப்பட்ட 22 சேனல்களில் 18 சேனல்கள் இந்தியாவை சேர்ந்தவை. 4 சேனல்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுபவை. கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் தற்போது முதன் முறையாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க - ஆந்திராவில் வெடித்துச் சிதறிய புல்லட் பைக்... வைரலாகும் வீடியோ
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- இந்தியாவின் ராணுவ அமைப்பு, ஜம்மு காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு இந்திய விவகாரங்கள் குறித்து, பல யூ டியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியுள்ளன. இவை அனைத்தும் தேச விரோதமான மைய கருத்துக்களை உள்ளடக்கியவை. இவற்றில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் யூ டியூப் சேனல்களும் அடங்கும். பொய்யான தகவல்களை பரப்பிய யூ டியுப் சேனல்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
இதையும் படிங்க - ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுங்கள்.! கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய திமுக எம்.பி டிஆர் பாலு
உக்ரைன் பிரச்னை தொடர்பாகவும் சில இந்திய யூ டியூப் சேனல்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், உலக நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு ஆகியவற்றின் மீது, அவதூறு பரப்பும் நோக்கத்தோடு இவை வீடியோக்களை பதிவிட்டுள்ளன.
இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.