ஹோம் /நியூஸ் /இந்தியா /

மெஸ்ஸி மீது தீராக்காதல்.. கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி பலியான இளைஞர்!

மெஸ்ஸி மீது தீராக்காதல்.. கட் அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி பலியான இளைஞர்!

உயிரிழந்த இளைஞர்

உயிரிழந்த இளைஞர்

கேரளாவைச் சேர்ந்த 22 வயது இளம் கால்பந்து ரசிகர் ஒருவர் மெஸ்ஸிக்கு கட்அவுட் வைக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

வளைகுடா நாடான கத்தாரில் 2022 பிபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது.

இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாடாத போதிலும்,மெஸ்ஸிக்காக அர்ஜெண்டினாவையும், ரொனால்டோவுக்காக போர்ச்சுகல் அணியையும் இந்திய ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் ஆதரவு தந்து வருகின்றனர். குறிப்பாக, கேரளா, கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கால்பந்து போட்டிகளுக்கு மோகம் அதிகம். அப்படி ஒரு கேரளாவைச் சேர்ந்த இளம் கால்பந்து ரசிகர் ஒருவர் மெஸ்ஸி கட்அவுட் வைக்கும் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் இள்ளிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஹமீத் குட்டி. இவரது 22 வயது மகன் அமீன். இவர் இரு வாரங்களுக்கு முன்னர் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்காக தனது வீட்டருகே கட்அவுட் வைக்க முயன்ற போது மின்சாரக் கம்பி அவர் மீது விழுந்து ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்தார். அமீனுடன் மேலும் இரு நபர்களும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிர் பிழைத்த நிலையில், அமீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எதிர்பாராத விபத்து காரணமாக இளம் வயதிலேயே அமீன் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Football, Kerala