• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்ல உதவிக்காக ஆண் நண்பரை அழைத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்ல உதவிக்காக ஆண் நண்பரை அழைத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

Rape - Reprasentational image

Rape - Reprasentational image

குல்விந்தர் காரை தனது தோழியின் பி.ஜி தங்குமிடத்துக்கு ஓட்டிச் செல்லாமல் ஆள் அரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு துப்பாக்கியை காட்டி தனது தோழியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

  • Share this:
லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்வதற்காக துணைக்கு அழைத்த இளம் பெண்ணை, அவரின் ஆண் நண்பர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பர்னாலா பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு 22 வயது. இவர் மொகாலியில் உள்ள பி.ஜி எனப்படும் மகளிருக்கான பேயிங் கெஸ்ட் தங்குமிடத்தில் தங்கியிருந்து வருகிறார். அந்த இளம் பெண் கடந்த அக்டோபர் 29ம் தேதி பர்னாலாவில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காக சென்று விட்டு, மொகாலிக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த இளம் பெண் சுமக்க முடியாத அளவுக்கு லக்கேஜ்களை வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்ததால் மொகாலியில் உள்ள தங்குமிடத்துக்கு செல்வதற்கு உதவியாக தன் ஆண் நண்பரான குல்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார்.

Also read: பொதுஇடத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர்கள்.. தர்மசங்கடத்தில் கட்சித் தலைமை

அன்றிரவு சுமார் 8 மணி அளவில் அந்த இளம் பெண் மொகாலியின் சிராக்பூர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்த போது அங்கு எஸ்.யூ.வி காருடன் தனக்காக காத்திருந்த குல்விந்தர் சிங்குடன் காரில் ஏறி புறப்பட்டிருக்கிறார். ஆனால் குல்விந்தர் காரை தனது தோழியின் பி.ஜி தங்குமிடத்துக்கு ஓட்டிச் செல்லாமல் ஆள் அரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு துப்பாக்கியை காட்டி தனது தோழியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.

இச்சம்பவத்துக்கு பிறகு அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றிருக்கிறார். அந்த இளம் பெண் டேக்ஸியை வரவழைத்து தனது தங்குமிடத்துக்கு சென்றுள்ளார். மறு தினம் நடந்த சம்பவங்கள் குறித்து சிராக்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Also read:  என் மனைவி மீதே குற்றச்சாட்டா.. நவாப் மாலிக்கின் நிகழ் உலக தொடர்புகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவேன் – தேவேந்திர பட்னாவிஸ்

இளம் பெண்ணின் புகாரையடுத்து பதிண்டா பகுதியைச் சேர்ந்த குல்விந்தர் சிங்கை காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது பாலியல் வன்புணர்வு, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: