காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள சோபியான் மாவட்டம் பின்ஜோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பகுதியைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பாதுகாப்புப் படையினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேருவதைத் தடுக்கும் விதமாக புதிய விதிமுறையின்படி, கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களும், அவர்களது இயக்கங்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை ரெபான் பகுதியில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த இரு வாரங்களில் 9 தாக்குதல்களில் 22 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.