விவிபாட் இயந்திரங்களை முதலில் சரிபார்க்க எதிர்கட்சிகள் கோரிக்கை: தேர்தல் ஆணையம் மறுப்பு!

நாங்கள் இந்தப் பிரச்னையை கடந்த மூன்று மாதங்களாக எழுப்பி வருகிறோம். எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளோம்.

விவிபாட் இயந்திரங்களை முதலில் சரிபார்க்க எதிர்கட்சிகள் கோரிக்கை: தேர்தல் ஆணையம் மறுப்பு!
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: May 21, 2019, 4:53 PM IST
  • Share this:
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே, விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சோதனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது என்று எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். இதுவரையில் இல்லாதவகையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று பிரதான எதிர்கட்சிகள் தீவிரமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தேர்தல் ஆணையரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, ‘நாங்கள் இந்தப் பிரச்னையை கடந்த மூன்று மாதங்களாக எழுப்பி வருகிறோம். எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளோம். தற்போது, நாங்கள் கேட்கும் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் ஏன் பதில் சொல்ல மறுக்கிறது. நாளை காலையில் மீண்டும் சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு அதில் எந்த காரணங்களும் இல்லை.


நாங்கள், விதிகளை மாற்றச் சொல்லவில்லை. வழிமுறைகளைத் தான் மாற்றச் சொல்கிறோம். முதலில் விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தோம். நாளை, காலையில் எங்களைச் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading