உலகின் மோசமான 30 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த 22 இந்திய நகரங்கள்!

உலகின் மோசமான 30 மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த 22 இந்திய நகரங்கள்!

மாசுபட்ட நகரங்கள்

காற்று மாசுபாட்டில் உலக அளவில் 10வது இடத்தை நாட்டின் தலைநகரான டெல்லி பிடித்துள்ளது. உலக அளவில் மாசுபாடு அதிகம் உள்ள தலைநகரங்கள் வரிசையில் டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது.

  • Share this:
உலகிலேயே மோசமாக மாசுபட்ட 30 பகுதிகளில் 21 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. இதன் மூலம் பட்டியலில் மூன்றில் இரண்டு பங்கை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன.

காற்று மாசுபாடு குறித்து உலக அளவில் ஆராய்ந்து வரும் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த IQAir என்ற அமைப்பு வருடா வருடம் உலக நாடுகளில் காற்று மாசுபாட்டின் தரம் என்ன என்பதை ஆராய்ந்து வருகிறது. இந்த அமைப்பு 'World Air Quality Report, 2020' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் 30 மோசமான நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் மூன்றில் இரண்டு பங்கை இந்திய நகரங்கள் ஆக்கிரமித்துள்ளன.

இப்பட்டியலில் உலகிலேயே மாசுபாடும்மிக்க நகரமாக சீனாவின் Xinjiang முதல் இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும் முதல் இடத்தை தவிர்த்து 10ம் இடம் வரை அடுத்தடுத்து இந்திய நகரங்களே பிடித்துள்ளன.

Xinjiang-ஐ தொடர்ந்து உலகிலேயே மோசமான 2ம் நகரமாக காசியாபாத் இடம்பிடித்துள்ளது.
இதனையடுத்து புலந்சாகர், பிஸ்ரக் ஜலால்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ மற்றும் பிவாரி ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

மாசுபட்ட நகரங்கள்


காற்று மாசுபாட்டில் உலக அளவில் 10வது இடத்தை நாட்டின் தலைநகரான டெல்லி பிடித்துள்ளது. உலக அளவில் மாசுபாடு அதிகம் உள்ள தலைநகரங்கள் வரிசையில் டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக டெல்லியில் 2019ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 15% காற்று மாசுபாடு குறைந்துள்ள நிலையிலும் டெல்லி மாசுபட்ட நகரங்கள் வரிசையில் 10ம் இடம் பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது.

உலகம் முழுவதும் 106 நாடுகளில் PM2.5 தரவுகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொத்தம் உள்ள 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பது இந்தியாவில் காற்றின் தரம் குறித்து எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளாக போக்குவரத்து, சமையல் எரிவாயு, மின் உற்பத்தி. தொழிற்துறை, கட்டுமானத்துறை, குப்பை எரித்தல் மற்றும் விவசாய கழிவு எரித்தல் போன்றவை இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து காற்று மாசுபாட்டுக்கு முதன்மை எதிரியாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி தவிர்த்து உலகின் மாசுபாடுமிக்க 30 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்கள் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத், புலந்சாகர், பிஸ்ரக், ஜலால்புர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரட், ஆக்ரா மற்றும் முசாபர்நகர். ராஜஸ்தானில் உள்ள பிவாரி. ஹரியானாவில் உள்ள ஃபரிதாபாத், ஜிந், ஹிசார், ஃபதேஹபாத், பந்த்வாரி, குருக்கிராம், யமுனா நகர், ரோஹ்தக் மற்றும் தருஹேரா. பீகாரில் உள்ள முஃசாபர்பூர் ஆகியவை ஆகும்.
Published by:Arun
First published: