முகப்பு /செய்தி /இந்தியா / “புதிய இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கை.. ஒவ்வொரு துறையிலும் புரட்சி” பிரதமர் மோடி பெருமிதம்!

“புதிய இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கை.. ஒவ்வொரு துறையிலும் புரட்சி” பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிகழ்வில் சுமார் 100 நாடுகள் கலந்துகொண்டுள்ளது, முழு உலகமும் இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது - பிரதமர் மோடி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bangalore [Bangalore], India

21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா சீர்திருத்த நடவடிக்கைகளால் ஒவ்வொரு துறையிலும் புரட்சி செய்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அருகிலுள்ள எலஹங்கா விமானப்படை மைதானத்தில் 5 நாட்கள் நடைபெறும் ஏரோ இந்தியா கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர்கள், குட்டி ரக விமானங்களின் சாகசங்களை கண்டுகளித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏரோ இந்தியா கண்காட்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார். இந்த நிகழ்வில் சுமார் 100 நாடுகள் கலந்துகொண்டுள்ளது என்றும் முழு உலகமும் இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.

அறிமுக சாகச நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஏரோ இந்தியாவின் தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர், விமானக் கண்காட்சியில் இந்திய விமானப்படை விமானங்களை காட்சிப்படுத்துவதற்கான அரங்கையும் திறந்து வைத்தார்.

First published:

Tags: Aero India, India, PM Modi