213 குற்ற வழக்குள்ளோர், 401 கோடீஸ்வரர்கள்... மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் பின்னணி?

இதிலும் 10 பேர் மீது கொலை வழக்கும், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.

213 குற்ற வழக்குள்ளோர், 401 கோடீஸ்வரர்கள்... மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் பின்னணி?
மக்களவைத் தேர்தல்
  • News18
  • Last Updated: April 10, 2019, 1:33 PM IST
  • Share this:
ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1266 வேட்பாளர்களில் 213 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

ஏப்ரல் 11-ம் தேதி முதல் நாடு முழுவதிலும் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேசிய தேர்தல் பார்வை மற்றும் ஏ.டி.ஆர் ஆகிய நிறுவனங்கள் நடத்திய தேர்தல் சர்வேயில், மொத்தம் போட்டியிடும் 1279 வேட்பாளர்களில் 1266 வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், 1266 வேட்பாளர்களில் 213 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 146 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதிலும் 10 பேர் மீது கொலை வழக்கும், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.


இந்த ஆய்வின் மூலம் கூடுதல் தகவல் ஒன்றும் ஆச்சர்யமளிக்கிறது. 1266 பேரில் 401 வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தான் இருக்கிறது. முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 83 காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

பாஜக வேட்பாளர்கள் 83 பேரில் 30 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மொத்தமாக 1279 வேட்பாளர்களில் 12 பேர் செய்த குற்றத்துக்காக தண்டனையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: தலைவர்களின் தகுதி: ஓ. பன்னீர்செல்வத்தின் தகுதி என்ன?
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading