இந்தியாவின் மிகவும் இளம் நீதிபதியாக ராஜஸ்தானைச் சேர்ந்த மயங்க் பிரதாப் பதவி ஏற்கிறார்.
2018-ம் ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான சட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்று தன்னுடைய 21-ம் வயதில் நீதிபதியாக உயர்ந்துள்ளார் மயங்க். மயங்க் கூறுகையில், “சட்டத்துறை மீதான ஆர்வம் மிகவும் சிறு வயதிலிருந்தே எனக்கு உள்ளது. சமூகத்தில் நீதிபதிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் என்னை மிகவும் கவர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு சேர்ந்தேன்.
ஐந்து ஆண்டுகளுக்கான எல்எல்பி படிப்பை நிறைவு செய்யும் நேரத்திலேயே நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றிருப்பது மிகவும் மகிழ்விக்கிறது. இத்தேர்வை முதல் முறையிலேயே வெல்வதற்கு உதவிய அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்” என்றார்.
நீதிபதிகளுக்கான நேரடித் தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயதை 23-ல் இருந்து 21 ஆகக் கடந்த ஆண்டு மாற்றியது ராஜஸ்தான் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: முறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.