ஹோம் /நியூஸ் /இந்தியா /

காஷ்மீரில் நிறைவுபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை! 21 கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த காங்கிரஸ்

காஷ்மீரில் நிறைவுபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை! 21 கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த காங்கிரஸ்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியில் பாரத் ஜோடோ யாத்திரையின் இறுதிநாள் விழாவில் பங்கேற்க இந்தியாவில் உள்ள 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Srinagar, India

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்ற நாடு தழுவிய நடைபயணத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் திமுக எம்.பி கனிமொழி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்திய உளவுப்பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாட், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைய உள்ள நிலையில், இதன் நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய அளவில் முக்கியமான 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

First published:

Tags: Congress, Congress alliance, Rahul gandhi