அசாமில் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

அசாம் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பாரக் பள்ளத்தாக்கில் பெய்த மிகக்கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்தனர்.

 • Share this:
  அசாமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் சூழலில், தெற்கு அசாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். மண்ணில் புதையுண்டவர்களின் உடலை தோண்டி எடுத்த காட்சிகள் காண்போரை கண்ணீரை வரவழைத்தது.

  தோண்ட தோண்ட உடல்கள் வரும் கொடுமையான நிலச்சரிவு அசாமில் ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேரின் வாழ்க்கை ஒரே நாளில் அஸ்தமித்துள்ளது.

  தெற்கு அசாமின் பாரக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஹெய்ல்கண்டி மாவட்டமும் ஒன்று. இரு வாரங்களாக கனமழை பெய்து வந்த நிலையில் போலோபஜார் அருகே இருக்கும் மோகன்பூரில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

  அதில் சிக்கிய இரு குழந்தைகள், ஒரு பெண் உள்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நிலச்சரிவுகளை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

  மேலும் படிக்க...

  சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

  Cyclone Nisarga | கரையைக் கடக்கும் நிசார்கா புயல் - மகாராஷ்டிரா & குஜராத்தில் பலத்த காற்றுடன் கனமழை

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published: