Home /News /national /

விஷச் சாராயம் குடித்து 32 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு

விஷச் சாராயம் குடித்து 32 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - விசாரணைக்கு பஞ்சாப் முதல்வர் உத்தரவு

கேப்டன் அமரீந்தர் சிங்

கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பஞ்சாப்பின் அமிர்தசரஸ், பதாலா, தர்ன்தரான் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரத்தில் விஷச் சாராயம் குடித்து 32 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் தொடர்பாக முச்சால் கிராமத்தைச் சேர்ந்த பல்விந்தர் கவுர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பலர் விஷச் சாராயத்தை குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

     



    இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு அந்த மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மதுவுக்கு பதிலாக சானிடைசர் குடித்த 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Amarinder Singh, Punjab

    அடுத்த செய்தி