முகப்பு /செய்தி /இந்தியா / “மிகவும் சூடான பிப்ரவரி இந்த ஆண்டு பிப்ரவரிதான்..” இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

“மிகவும் சூடான பிப்ரவரி இந்த ஆண்டு பிப்ரவரிதான்..” இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

வெப்பநிலை

வெப்பநிலை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இதுவரை பிப்ரவரி மாதங்களில் பதிவான வெப்பநிலைகளிலே 2023 பிப்ரவரி தான் மிகவும் அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே இதுவரை இருந்த பிப்ரவரி வெப்பநிலையில் அதிகபட்சமாகும்.

1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C, 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி வெப்பநிலை

.

First published:

Tags: Heat Wave, Indian meteorological department, Summer Heat