ஹோம் /நியூஸ் /இந்தியா /

பட்ஜெட் 2023: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்.. பட்ஜெட்டுக்கும் அல்வாவுக்கும் என்ன தொடர்பு?

பட்ஜெட் 2023: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்.. பட்ஜெட்டுக்கும் அல்வாவுக்கும் என்ன தொடர்பு?

அல்வா கிண்டும் நிகழ்ச்சி

அல்வா கிண்டும் நிகழ்ச்சி

Budget 2023: பட்ஜெட்டிற்கான அல்வா கிண்டும் நிகழ்ச்சி குடியரசு தினமான இன்று நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

2023 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய தினமான ஜனவரி 31ஆம் தேதி அன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெறும். பொதுவாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்தாக சில நாள்களுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சகம் மரபாக மேற்கொள்ளும். பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது கொண்டாடும் விதமாக மத்திய நிதியமைச்சர் ஊழியர்களுக்கு தனது கையால் அல்வா கிண்டி வழங்குவார்.

நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் பகுதியில் தான் நாட்டின் பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சக ஊழியர்கள் தயாரிப்பார்கள். பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய 10 நாள் இந்த ஊழியர்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கி பட்ஜெட்டை தயாரிப்பார்கள். பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்கா யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. நிதியமைச்சருக்கு மட்டுமே விதிவிலக்கு.

எனவே, இப்படி கடின உழைப்புடன் பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் தனது கையால் அல்வா கிண்டி அதை ஊழியருக்கு பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இதை மத்திய நிதியமைச்சகம் மரபாக வைத்துள்ளது.  கடந்தாண்டு கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த அல்வா கிண்டு விழா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 2023 பட்ஜெட்டிற்கான அல்லா கிண்டும் நிகழ்ச்சி குடியரசு தினமான இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கையால் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கவுள்ளார்.

First published:

Tags: Finance minister, FINANCE MINISTRY, Nirmala Sitharaman, Union Budget 2023