• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2021 குடியரசு தின விழா பேரணியை புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்த திட்டம்

2021 குடியரசு தின விழா பேரணியை புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்த திட்டம்

குடியரசு தின விழா பேரணி

குடியரசு தின விழா பேரணி

25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை.

  • Share this:
    கொரோனா பரபல் காரணமாக டெல்லியில், 2021 குடியரசு தின விழா பேரணி புதிய கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில், தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வரும் 2021 ஜனவரி 26-ல் டெலிலியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவை எளிமையாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆண்டுதோறும், டெல்லி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண, லட்சக் கணக்கான பார்வையாளர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில், 2021-ல் 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    வழக்கமாக குடியரசு தின விழாவின் போது, குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பை துவக்கி வைப்பார். இந்த அணிவகுப்பு 8.2 கி.மீ. துாரத்திற்கு நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு முப்படையினரின் அணிவகுப்பு, 3.3 கி.மீ., துாரம் மட்டுமே இருக்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், கலாசார நிகழ்ச்சிகளும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: