• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Women Unemployment Rate | 2019-20இல் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 4.2%ஆக குறைவு

Women Unemployment Rate | 2019-20இல் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 4.2%ஆக குறைவு

பெண்களுக்கான வேலையின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 2018-19ல் 5.1 சதவீதத்திலிருந்து 2019-20ல் 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) நடத்திய கால தொழிலாளர் படை ஆய்வில் (PLFS) தெரியவந்துள்ளது. NSO என்பது புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் ஒரு பிரிவு ஆகும்.

இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "2018-19ம் ஆண்டில் 5.1 சதவீகிதமாக இருந்த பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 2019-20ம் ஆண்டில் 4.2 சதவீதமாக குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது. MGNREGS இன் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளில் (தனிநபர் நாட்களில்) 2019-20 ஆம் ஆண்டிற்கான PLFS படி, பெண்களின் பங்கு சுமார் 207 கோடி நபர் நாட்களாக அதிகரித்துள்ளது. பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2018-19ம் ஆண்டில் 24.5 சதவீதத்திலிருந்து 2019-20ல் 30.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பு தொடர்பான தகவல்கள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராமேஸ்வர் தேலி கடந்த திங்களன்று (ஜூலை 26) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சக்தியில் பெண்கள் பங்களிப்பை மேம்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, பெண் தொழிலாளர்களுக்கு இணக்கமான வேலை சூழலை உருவாக்குவதற்காக தொழிலாளர் சட்டங்களில் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

Must Read | வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு விரைவில் ‘குட்பை’… கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய இ-மெயில்

அதில் ஊதியத்துடன் பெரும் மகப்பேறு விடுப்பை 12 வாரங்கள் முதல் 26 வாரங்கள் வரை உயர்த்துவது, 50 அல்லது அதற்கு மேற்பட்ட பெண் ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு வசதிக்கான கட்டாய ஏற்பாடு, இரவுப் பணிகளில் பெண் தொழிலாளர்களை போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அனுமதிப்பது போன்றவை இதில் அடங்கும். ஓபன் காஸ்ட் பணிகள் உட்பட பூமி மேலேயுள்ள சுரங்கங்களில் மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களை வேலைக்கு அனுமதிக்கும் ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது.

அதேபோல பூமிக்கு கீழ் உள்ள சுரங்கங்களில் தொடர்ச்சியான இருப்பு தேவைப்படாத தொழில்நுட்பம், மேற்பார்வை மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளில், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பெண்கள் வேலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பெண்களின் வேலைவாய்ப்பை அரசாங்கம் பல வகைகளில் அதிகரித்துள்ளது. மேலும், பெண் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக, அரசு பெண் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள், தேசிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தொழிற்பயிற்சி நிறுவனங்களின் வலையமைப்பு மூலம் பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

Must Read | குவாட் குழு முதல் அமெரிக்க தடுப்பூசிகள் வரை... அமெரிக்க வெளியுறவு செயலாளரின் பிரத்யேக பேட்டி!

இதுதவிர பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (MGNREGS), பண்டிட் தீன்தயல் உபாத்யா கிராமீன் கவுசல்யா யோஜனா (DDU-GKY) மற்றும் தீண்டயால் அந்தோடயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NULM) போன்ற திட்டங்களுக்கு கணிசமான முதலீடு சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களை ஊக்குவித்தல் மற்றும் பொது செலவினங்களை அதிகரித்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை பெண்களுக்காக நாட்டில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

அதேபோல சமூக பாதுகாப்பு சலுகைகள் மற்றும் வேலை இழப்பை மீட்டெடுப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஊக்குவிக்கும் வகையில் ஆத்மனிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜ்னா (ABRY) திட்டம் 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் ஆரம்பமானது. இந்தத் திட்டம் முதலாளிகளின் நிதிச் சுமையைக் குறைப்பதோடு அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கிறது. அதாவது வேலைவாய்ப்பு வலிமையைப் பொறுத்து EPFO-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ABRY இன் கீழ், மத்திய அரசு இரண்டு வருட காலத்திற்கு ஊழியர்களின் பங்கு (12% ஊதியம்) மற்றும் முதலாளியின் பங்கை (12% ஊதியம்) செலுத்துகிறது. அல்லது ஊழியர்களின் பங்கை மட்டுமாவது வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இணையும் புதிய ஊழியர்களில் கொரோனா பரவலின் போது வேலை இழந்தவர்கள் மற்றும் 2020 செப்டம்பர் 30ம் தேதி வரை எந்த ஈபிஎஃப் பதிவு செய்த நிறுவனத்திலும் சேராதவர்கள் அடங்குவர். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் பதிவு செய்வதற்கான இறுதி தேதி 2021ம் ஆண்டு ஜூன் 30 முதல் 2022ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021ம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி நிலவரப்படி, இந்த திட்டத்தின் மூலம் 84,390 நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 993 கோடி பயன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5.88 லட்சம் பெண் பயனாளிகள் உட்பட 22 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அடங்குவர்.

சமூகப் பாதுகாப்பு சலுகைகளுடன் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க அரசாங்கம் தொழில் நிறுவன முதலாளிகளை ஊக்குவித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு முதலாளியின் முழு பங்களிப்பை அதாவது ஈபிஎஃப் மற்றும் இபிஎஸ் ஆகிய இரண்டிற்கும் 12 சதவீதத்தை மூன்று வருட காலத்திற்கு ஈபிஎஃப்ஒ மூலம் புதிய ஊழியர்களுக்கு செலுத்துகிறது. அதில் நிறுவனத்தின் மூலம் ஒரு பயனாளியை அதாவது தங்கள் புதிய ஊழியரை பதிவு செய்வதற்கான முனைய தேதி 2019 மார்ச் 31 ஆகும். 2019 மார்ச் 31 வரை பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நன்மைகளைப் பெறுவார்கள்.

மறுபுறம் PMRPY திட்டத்தின் கீழ், ஜூன் 14, 2021 வரை, 26.05 லட்சம் பெண்கள் பயனாளிகள் உட்பட 1.21 கோடி பயனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டம் சுயதொழில் வசதிக்காக அரசாங்கம் சார்பில் தொடங்கப்பட்டது. PMMY திட்டம் இணை இலவச கடன்களின் கீழ் ரூ. 10 லட்சம், மைக்ரோ / சிறு வணிக நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் தங்கள் வணிக நடவடிக்கைகளை அமைக்க அல்லது விரிவாக்க வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் சுமார் 70 சதவீத கடன்கள் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல அரசாங்கம் MGNREGA கீழ் தினசரி ஊதியத்தை ரூ.182 லிருந்து ரூ. 202 ஆக உயர்த்தியது. இதனால் கிட்டத்தட்ட 13.62 கோடி குடும்பங்கள் பயனடைந்தன. மேலும் MGNREGA இன் கீழ் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளில், பெண்கள் பங்கு 2019-20 நிதியாண்டில் சுமார் 145.35 கோடி நபர் நாட்களிலிருந்து 2020-21 நிதியாண்டில் சுமார் 207 கோடி நபர் நாட்களாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: