காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று தமிழகம் வருகை!

ஆண்டிபட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று தமிழகம் வருகை!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
  • News18
  • Last Updated: April 12, 2019, 8:08 AM IST
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கடந்த மாதம் 13-ம் தேதி தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரிக்கு காலை 11 மணிக்கு வந்தடைகிறார்.


தேவராஜ் மஹால் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஓசூர், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள ராம்நீக் கார்டன் பகுதியில் மதியம் 1 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அப்போது, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

மாலை 3-45 மணிக்கு தேனி மாவட்டத்தில் உள்ள அன்னஞ்சி விலக்கு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது, தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.இறுதியாக மதுரை மாவட்டம், பெருங்குடியில் உள்ள மண்டேலா நகரில் மாலை 5-30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

இதனிடையே, தேனியில் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டமாக நேற்று நடைபெற்றன. அப்போது, மேடையில் மேற்கூரை கம்பிகள் முழுவதுமாக சரிந்து விபத்து ஏற்பட்டது. பணியாளர்கள் சுதாரித்துக் கொண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மேடையை பார்வையிட்டனர்.

இந்நிலையில், ஆண்டிபட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை வருகிறார். இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் 2 ஹெலிகாப்டர்களை இறக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... நீட் தேர்வு ரத்து...! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன?


Also see... விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்