தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களா் அந்த பெண்ணின் உடலை பின்னர் எரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி முகமது ஆரிப், சிந்தகுந்தா சென்னகேசவாலு, ஜோலி சிவா, ஜோலு நவீன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இவர்கள் காவலர்களை தாக்கி தப்பியோடிய காரணத்திற்காக வேறு வழியின்றி சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்த நிலையில், இந்த என்கவுன்டரை விசாரிக்க உச்ச நீதிமன்றம் குழு அமைத்தது. இந்த குழு தனக்கு அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது. குழுவின் அறிக்கை தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி சூரிய காந்த், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் சமர்பிக்கப்பட்டது.
அதில், இந்த வழக்கு விசாரணையை காவல்துறை முறையாக கைது செய்யப்படவில்லை எனவும், இந்த என்கவுன்டரில் ஈடுபட்ட 10 காவல்துறையினரும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சுட்டு கொல்லப்பட்ட நான்கு போரில் மூவர் சிறார்கள் எனவும் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையோ இவர்களை 20 வயதினர் எனக் கூறியிருந்தது.
'இது என்கவுன்டர் வழக்கு. இதில் கமிஷன் சிலரை குற்றவாளிகள் என கண்டறிந்துள்ளது. எனவே வழக்கை நாங்கள் உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்புகிறோம்' என உச்ச நீதிமன்ற அமர்வு கூறி உத்தரவிட்டது.
இதையும் படிங்க:
"ஜீன்ஸ் பேண்ட் அணிய எதிர்ப்பு".. சிறுமியை குடும்பத்தினரே அடித்துக்கொன்ற கொடூரம்!
இந்த வழக்கில் 10 காவலர்கள் மீது குழு கொலை குற்றம் சுமத்தி அறிக்கை சமர்பித்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது உயர் நீதிமன்ற விசாரணையில் தெரியவரும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.