ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒரு ஆண்டில் மூடப்பட்ட 20ஆயிரம் பள்ளிகள்.. வேலையிழந்த 2.5 லட்சம் ஆசிரியர்கள் - அதிர்ச்சியில் கல்வித்துறை!

ஒரு ஆண்டில் மூடப்பட்ட 20ஆயிரம் பள்ளிகள்.. வேலையிழந்த 2.5 லட்சம் ஆசிரியர்கள் - அதிர்ச்சியில் கல்வித்துறை!

மாதிரி படம்

மாதிரி படம்

நாடு முழுவதும் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசியர்களும் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  நாடு முழுவதும் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசிரியர்களும் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  உலகிலேயே அதிக அளவில் பள்ளிகள் மற்றும் மாணவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பள்ளிகளில் ஏறக்குறைய 26 கோடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான கல்வித் திட்டத்தை தாங்களே வகுத்து வருகிறார்கள். இதனால் மாநிலங்களுக்கிடையே கல்வியின் நிலை மற்றும் தரத்தில் மாற்றங்கள் இருந்தாலும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கல்வித் திட்டம் பின்பற்றப்படுகிறது.

  இதை மேலும் ஒருமுகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வகுத்து அதன்படி ஒரே நாடு, ஒரே கல்வி என்கிற கெள்கையை கொண்டு வரக் காத்திருக்கிறது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

  Read More: கருணாஸ் பட நாயகிக்கு வெளிவர முடியாத பிடிவாரண்ட்.. மும்பை நீதிமன்றம் அதிரடி!

   புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கூடுதல் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+)என்கிற அமைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பிராந்திய வாரியாக தகவல்கள் சேகரிக்ககப்பட்டு வருகிறது. அப்படி தகவல் சேகரிக்கும் போது தான் நாடு முழுவதும் 20 ஆயிரத்தற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் இரண்டரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். அதிலும் மூடப்பட்ட பள்ளிகளில் 95 விழுக்காடு தனியார் பள்ளிகள்  என்கிற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

  UDISE+ திரட்டிய தகவல்களில் சில மகிழ்ச்சியான தரவுகளும் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகள் முதல் மேல்நிலை வகுப்புகள் வரை மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 19 லட்சம் கூடுதல் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் இடைநிற்றலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மகிழ்ச்சியான தரவுகளோடு 20ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்ட துயரமான தகவலும் வெளியாகியுள்ளது.

  Read More: இடஒதுக்கீடு உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்- பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்

   மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி குறித்து பல்வேறு தரவுகளையும் UDISE+ திரட்டியுள்ளது. அதில் நாட்டில் உள்ள பள்ளிகளில் 45 விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி உள்ளது. அதோடு கடந்த கல்வி ஆண்டில் மட்டும் பணிபுரியும் முழுநேர ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.95 லட்ம் குறைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதும், சேர்க்டைக தாமதம் ஆனதும் இதற்கான காரணமாக கூறப்பட்டாலும், கொரோனாவுக்கு பிந்தைய காகட்டத்தில் மற்ற துறைகள் எழுச்சி பெற்று வந்தாலும் கல்வித்துறையில் மட்டும் தொடர் பின்னடைவு ஏன் என்பதை கல்வித்துறை நிபுணர்களை கொண்டு மத்திய ஆய்வு செய்ய முன்வரவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Education, School