முகப்பு /செய்தி /இந்தியா / 30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் தவிக்கும் 90s கிட்ஸ்.. விரக்தியில் பாதயாத்திரை செல்லும் 200 இளைஞர்கள்!

30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் தவிக்கும் 90s கிட்ஸ்.. விரக்தியில் பாதயாத்திரை செல்லும் 200 இளைஞர்கள்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

கர்நாடகாவில் திருமணம் ஆகாத 200 ஆண்கள் இணைந்து 105 கி.மீ பாதயாத்திரை செல்ல முடிவெடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடகா மாநிலம் மாண்டியா என்ற மாவட்டத்தில் விநோத முயற்சியாகத் திருமணம் ஆகாத 200 ஆண்கள் இணைந்து திருமணம் ஆக வேண்டி 105 கி.மீ பாதயாத்திரையாக பிரபலமான மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்ல உள்ளனர். மாண்டியா மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள பெரும்பாலான இளைஞர்களுக்குப் பெண் கிடைக்காமல் திருமணம் ஆகவில்லை. இதனால் திருமணத்திற்குப் பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரைக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர்.

இந்த யாத்திரையைப் பிப்ரவரி 23 ஆம் தேதியில் கே.எம்.தொட்டி கிராமத்தில் இருந்து தொடங்கி பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான எம்.எம் மலை வரை செல்ல உள்ளனர். 3 நாட்கள் தொடர்ந்து நடைப்பயணமாக 105 கிலோ மீட்டர் வரை இந்த பாதயாத்திரை மூலம் கடக்கவுள்ளனர்.

பிரம்மச்சாரிகள் பாதயாத்திரையான இதில் 30 வயது கடந்து திருமண நடக்காத ஆண்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியான 10 நாட்களில் சுமார் 100 திருமணமாகாத ஆண்கள் யாத்திரைக்காகப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டத்தில் மட்டுமின்றி பெங்களூர், மைசூர், ஷிவமொக்கா ஆகிய பகுதிகளில் இருந்தும் திருமணமாகாத இளைஞர்கள் இதில் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து யாத்திரை ஏற்பாடு செய்தவர்கள் கூறியதாவது, திருமணம் ஆகவில்லை என்று ஆண்கள் மனதளவில் வேதனைப் படுவதைத் தடுக்கும் வகையில் இது போன்ற யாத்திரைகள் தேவைப்படுகிறது என்றுள்ளனர். தொடர்ந்து, இதனால் ஆண்கள் சோர்வு அடைந்திடாமல் தங்களுக்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்ய இது உதவும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த யாத்திரை நாட்களில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : இன்ஸ்டாகிராம் பழக்கம்... காதலர் தின பரிசு.. 51 வயது பெண்ணை ஏமாற்றி ரூ.3.68 லட்சத்தை சுருட்டிய போலிக் காதலன்..!

மாண்டியா மாவட்டத்தின் விவசாய தலைவர் சுனந்தா ஜெயராம் கூறுகையில், பெண்களுக்கான சமுதாயத்தை உருவாக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுத் தான் கொண்டு இருக்கும் என்றும் பெண் குழந்தைகள் கருக் கலைப்புகள் அதிகம் நடைபெற்றதன் விளைவாகத்தான் இந்த கிராமத்தில் திருமணத்திற்குப் பெண்கள் தட்டுப்பாடு நிகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Karnataka, Men, Trending