கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று: உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

நாட்டின் பாதுகாப்புக்கு ஆதரவளித்த வலிமை மிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 11:15 AM IST
கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று: உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!
கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று
Web Desk | news18
Updated: July 26, 2019, 11:15 AM IST
கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவத்தின் உறுதியையும், வலிமையையும் ஒருசேர உலகிற்கு பறைசாற்றிய கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

அப்போது, கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Loading...ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.பி.மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்


கடந்த 1999-ம் ஆண்டில் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படையினரை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. 60 நாட்கள் நடைபெற்ற இந்த சண்டை, ஜூலை 26-ம் தேதி முடிவடைந்தது. இந்தியப் பகுதிகளை ராணுவம் மீட்டது. கார்கில் வெற்றி தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. கார்கில் போரில் தனது கால்களை இழந்த ராணுவ வீரர், தனது குடும்பத்துடன் வந்து இந்த வெற்றித் தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அதில், இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்நாள் நமது வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த தருணத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு ஆதரவளித்த அந்த வலிமை மிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...