ஆந்திராவில் பரிதாபம்: தற்கொலைக்கு முயன்று கால்களை இழந்த நபர்

மாதிரிப்படம்

ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர் தன் இருகால்களையும் இழந்து துடித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

 • Share this:
  ஆந்திராவில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர் தன் இருகால்களையும் இழந்து துடித்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

  ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டம் நூலகப் பேட்டையைச் சேர்ந்தவர் 20 வயது இளைஞர் பிரிதிவி.

  இவர் வாழ்க்கையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது மும்பையிலிருந்து விஜயவாடா நோக்கி வந்து கொண்டிருந்த திலக் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர்கள் 100 மீ தொலைவிலிருந்து பார்த்த போது இவர் தண்டவாளத்தில் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

  வேகமாக ரயில் வந்து கொண்டிருந்ததையடுத்து எமர்ஜென்சி பிரேக்கை ரயில் ஓட்டுநர்கள் அழுத்தினர். ஆனால் ரயில் வேகம் குறைந்தாலும் பிரிதிவி படுத்திருந்த இடத்துக்கு முன்பாக நிற்காமல், அவரது காலில் ஏறி இறங்கியது. இதனையடுத்து துடிதுடிக்க இரண்டு கால்களும் துண்டாகி விட்டன.

  ஓட்டுநரான ஹனுமந்தராவ் மற்றும் அவரது உதவியாளர் ரகுராம் ராஜூ, ரயிலை நிறுத்தி இறங்கி வந்து பிரித்வியை தண்டவாளத்திலிருந்து வெளியே இழுத்தனர். பிரித்வியின் கால்களை பிளாஸ்டிக் கவரில் போட்டனர். பிறகு பிரித்வியை ரயிலில் ஏற்றிக் கொண்டு விஜயவாடா நோக்கி ரயில் புறப்பட்டது. ஏற்கெனவே தகவல் அளித்ததால் அங்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவர்கள் ஆம்புலன்ஸில் அவரை விஜயவாடா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் இவரது கால்களை இணைக்கப் போராடினர், ஆனால் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு இருந்ததால் மருத்துவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை.

  உயிர் போயிருக்க வேண்டிய நபர் ரயில் ஓட்டுநர்களின் மனிதாபிமான செயலினால் கால்களை மட்டும் இழந்து உயிர்ப்பிழைத்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: