Home /News /national /

குடிக்க பணம் தராததால் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்ற 20 வயது பேரன்

குடிக்க பணம் தராததால் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்ற 20 வயது பேரன்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருமண விழாவுக்காக வந்திருந்த போது ஹிமேஷ் குடிக்க பணம் கேட்டு தாத்தா பாட்டியிடம் சண்டை போட்டுள்ளார்.

    உத்திரப் பிரதேச மாநிலத்தில் குடிக்க பணம் தர மறுத்த தாத்தா, பாட்டியை 20 வயது பேரன் கொலை செய்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஹிமேஷ் என்ற 20 வயது இளைஞர் தனது தாத்தா பிரேம்சங்கர், பாட்டி பவான் தேவியுடன் வசித்துவருகிறார். இளைஞர் ஹிமேஷ் மது போதைக்கு தீவிரமாக அடிமையாகியுள்ளார்.

    இந்நிலையில், பேரன் ஹிமேஷ் தனது தாத்தா பாட்டியுடன் உத்தரப் பிரதேசத்தின் தாம்ரி என்ற கிராமத்தில் திருமண நிகழ்வுக்கு வந்துள்ளார். திருமணம் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற நிலையில், விழாவுக்கு வந்திருந்த ஹிமேஷ் குடிக்க பணம் கேட்டு தாத்தா பாட்டியிடம் சண்டை போட்டுள்ளார். இருவரும் பணம் தர மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு, அந்த கிராமத்தில் உள்ள இரு வேற வீடுகளில் உடல்களை புதைத்து விட்டு கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

    உயிரிழந்த பிரேம்சங்கரின், பவான் தேவியின் மற்றொரு மகன் தனது சகோதரர் மகனான ஹிமேஷ் மீது சந்தேகப் பட்டு காவல்துறையில் அளித்த புகாரில் இந்த அதிர்ச்சிக்குரிய கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை அடுத்து விசாரணை நடத்திய காவல்துறை இருவரின் உடலையும் கண்டுபிடித்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது.

    இதையும் படிங்க: பஞ்சாப் இடைத்தேர்தல் - முதலமைச்சர் தொகுதியிலேயே ஆம் ஆத்மி அதிர்ச்சி தோல்வி

    பின்னர், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள காவல்துறை பேரன் ஹிமேஷை கைது செய்து விசாரித்துள்ளது. குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் நடைபெற்ற வாக்கு வாதம் முற்றியே இந்த கொலையை செய்ததாக ஹிமேஷ் ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து ஹிமேஷ் தாம்ரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Murder, Uttar pradesh

    அடுத்த செய்தி