Home /News /national /

திருமணமான தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை குத்திக்கொலை செய்த அண்ணன்..!!

திருமணமான தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை குத்திக்கொலை செய்த அண்ணன்..!!

CCTV

CCTV

Karnataka Shocking Incident: கர்நாடக மாநிலத்தில் திருமணமான தங்கைக்கு விடாமல் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை அண்ணன் சரமாரியாக குத்திக் கொலை செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
    கர்நாடக மாநிலத்தில் திருமணமான பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் பெண்ணின் சகோதரர்.

    கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் சிங்கார்பாக் பகுதியை சேர்ந்தவர் அமீர்கான். அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். பணியாற்றும் இடத்திற்கு அருகில் ஜிஷான் என்ற ஆட்டோ ஓட்டுநரின் தங்கையை அமீர்கான் காதலித்து வந்ததாக தெரிகின்றது.

    இந்நிலையில் ஜிஷானின் தங்கைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் விடாத அமீர்கான் திருமணமான ஜிஷானின் தங்கைக்கு, வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்துள்ளார்.

    பெண்ணின் வீட்டார் பலமுறை எச்சரித்தும் அமீர்கான் தொடர்ந்து பெண் வீட்டிற்கு மது போதையில் சென்று அடாவடியில் ஈடுபட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அமீர்கான் கடையில் பணியில் இருந்துள்ளார். அப்போது கடைக்கு வந்த பெண்ணின் சகோதரர் ஜிஷான் திடீரென அமீர்கானை தாக்க தொடங்கியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடையின் உள்ளே இருந்தவரை வெளியே இழுத்துப்போட்டு கடுமையாக தாக்கியவர் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கண்மூடித்தனமாக குத்தியுள்ளார்.

    Also read... சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்

    சிலமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜிஷான் அங்கிருந்து புறப்பட்டுள்ளார் ஆனால் கடுமையாக தாக்கப்பட்ட அமீர்கான் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்

    இந்த சம்பவம் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிஷானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    -செய்தியாளர்: செல்வா.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Karnataka, Murder

    அடுத்த செய்தி