Home /News /national /

யோகி ஆதித்யநாத் மீதான 20 ஆண்டுகள் பழைய கொலை வழக்கு தள்ளுபடி!

யோகி ஆதித்யநாத் மீதான 20 ஆண்டுகள் பழைய கொலை வழக்கு தள்ளுபடி!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பில்லை என்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  • News18
  • Last Updated :
    உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான 20 ஆண்டுகள் பழைய கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு போலீஸ் கான்ஸ்டபிள் சத்ய பிரகாஷ் யாதவ், கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் அப்போது, கோரக்பூர் எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தூசி தட்டப்பட்டது.

    கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு தொடர்பில்லை என்று சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் யோகி ஆதித்யநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

    எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    Published by:Sankar
    First published:

    Tags: Yogi adityanath

    அடுத்த செய்தி