ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராணுவத்தில் சேரமுடியாத விரக்தியில் 20 வயது இளைஞர் தற்கொலை

ராணுவத்தில் சேரமுடியாத விரக்தியில் 20 வயது இளைஞர் தற்கொலை

உயிரிழந்த கமலேஷ் கோஸ்வாமி

உயிரிழந்த கமலேஷ் கோஸ்வாமி

இந்திய ராணுவத்தில் பணிபுரிவதற்கான அக்னிவீர் திட்டத்தின் தகுதி தேர்வில் தோல்வியடைந்த 20 இளைஞர் விரக்தியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttarakhand (Uttaranchal), India

  நாடு முழுவதும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் ரோஜ்கார் யோஜ்னா திட்டத்தில் நாட்டின் அரசு துறைகளில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக இதில் 75,000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ராணுவத்தில் இளம் வீரர்களை சேர்க்கும் விதமாக அக்னிவீர் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.17 முதல் 23 வயதினர் மட்டும் இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிபுரிய முடியும்.

  இந்த திட்டத்திற்கான தகுதி தேர்வுகள் பல்வேறு மாநிலங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் அங்குள்ள கப்கோட் பகுதியின் மல்லதேஷ் கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் கோஸ்வாமி என்ற இளைஞர் பங்கேற்றுள்ளார். இவரின் தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகியுள்ளது. இளம் வயது முதலே ராணுவத்தில் சேர ஆர்வம் கொண்டிருந்த கமலேஷ், எப்படியும் தேர்வில் வெற்றி பெற்றுவிடுவோம் என ஆர்வத்துடன் இருந்த நிலையில், அவர் தோல்வி அடைந்ததாக முடிவுகள் வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கமலேஷ் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

  அதற்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், "தான் உடல்தகுதி தேர்வு, என்சிசி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வைத்திருந்தும் ஏன் தோல்வி அடைந்தேன் என தெரியவில்லை. யாரும் அக்னிவீர் திட்டத்தில் பங்கேற்க வேண்டாம்" என அந்த வீடியோவில் பேசி, அதை சமூக வலைத்தளங்களில் ஸ்டேடசாக வைத்து விஷம் அருந்தியுள்ளார். பின்னர், விவரம் அறிந்து வீட்டினர் கமலேஷை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு! சிறுமியின் உயிரைப் பறித்த லிஃப்ட்!

  மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி, அமைச்சர் சந்தன் ராம்தாஸ் ஆகியோர் கமலேஷ் குடும்பத்தினரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். மேலும் குடும்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்தனர். அதேவேளை, இந்த சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகளின் மோசமான அணுகுமுறையே காரணம் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

  தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Kannan V
  First published:

  Tags: Agnipath, Suicide, Uttarkhand