ஹோம் /நியூஸ் /இந்தியா /

நள்ளிரவில் பட்டாசு கடையில் தீவிபத்து.. 2 பேர் படுகாயம் ; 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

நள்ளிரவில் பட்டாசு கடையில் தீவிபத்து.. 2 பேர் படுகாயம் ; 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

சித்தூரில் பட்டாசு கடையில் தீவிபத்து

சித்தூரில் பட்டாசு கடையில் தீவிபத்து

கண் இமைக்கும் நேரத்தில் அருகே இருந்த ஐந்து கடைகளுக்கும் தீ பரவியதால், பட்டாசுகள் வெடித்து சிதறின.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chittoor, India

  ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

  தீபாவளி கொண்டாட்டங்கள் நடக்கும் அதே வேளையில் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படும். அதுவும் பட்டாசு ஒரு சிறு தீப்பொறி பட்டால் போதும் நொடிகளில் வெடிக்க ஆரம்பித்து விடும். எரிகிறது என்று பார்ப்பதற்குள் மொத்த பட்டாசுகளுமே தீப்பற்றிக்கொள்ளும். அப்படி ஒரு விபத்து சித்தூரில் நிகழ்ந்துள்ளது.

  தீபாவளியை முன்னிட்டு சித்தூர் அடுத்த வடமாலைப்பேட்டையில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில், பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

  இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் மஹாராஷ்டிரா காவலர்கள்...கல்சுபாய் சிகரத்தை சுத்தம் செய்த குழு

  கண் இமைக்கும் நேரத்தில் அருகே இருந்த ஐந்து கடைகளுக்கும் தீ பரவியதால், பட்டாசுகள் வெடித்து சிதறின. இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

  இதற்கிடையே, புத்தூர், காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Chittoor, Crackers, Fire accident