”லாரி இருக்கு... ₹ 20 லட்சம் மதிப்பிலான வெங்காயத்தைக் காணோம்...” ஓட்டுநரை தேடி வரும் போலீஸ்

லாரியில், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வெங்காயங்கள் இருந்துள்ளன.

”லாரி இருக்கு... ₹ 20 லட்சம் மதிப்பிலான வெங்காயத்தைக் காணோம்...” ஓட்டுநரை தேடி வரும் போலீஸ்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 29, 2019, 12:01 PM IST
  • Share this:
நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவும் நிலையில், மத்தியபிரதேச மாநிலம் சிவபுரியில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி காணாமல் போய் பின்னர் லாரி மட்டும் கிடைத்துள்ளது.

நாசிக்கில் இருந்து கோரக்பூர் நோக்கி செல்ல வேண்டிய லாரியில், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வெங்காயம் இருந்துள்ளன. ஆனால் குறிப்பிட்ட தேதியில் கோரக்பூரில் வெங்காய லாரி செல்லவில்லை.

இதனால் வாங்கியவர் விற்பனையாளரிடம் தகவல் அளித்துள்ளார். பின்பு விசாரித்தபோது வரும் வழியிலேயே லாரி காணாமல் போயுள்ளது. இது குறித்து தொழிலதிபர் பிரேம் சந்த் சுக்லா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில், சிவபுரி அருகே வெங்காயம் இல்லாமல் காலியாக லாரி நின்று கொண்டிருப்பதாகவும். காணாமல் போன லாரி ஓட்டுநரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  
First published: November 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்