அசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 53 பேர் உயிரிழப்பு!

பீகாரில் மேலும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அசாம், பீகார் மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 53 பேர் உயிரிழப்பு!
அசாம் மழை வெள்ளம்
  • News18
  • Last Updated: July 17, 2019, 9:10 AM IST
  • Share this:
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பீகாரிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 33 பேர் உயிரிழந்தனர். 

வரலாறு காணாத பெரு மழையால் அசாமில் முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 30 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 12 மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மழை பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் அசாமில் உள்ள போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


2004-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வெள்ளத்தை அந்த உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசாமில் நீரில் மூழ்கிய பாலம்


இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மறுகட்டமைப்புக்காகவும் முதற்கட்டமாக 251 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 33 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த இடங்களை விமானத்தில் பறந்தபடி முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆய்வு செய்தார்.

பீகாரில் ஏற்பட்ட வெள்ள நீரில் நடந்து வரும் சிறுவர்கள்


வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க... கொட்டித்தீர்த்த பருவமழை! வெள்ளக்காடான வடமாநிலங்கள்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading