அமெரிக்க ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழப்பு - 21 வயது இளைஞர் வெறிச்செயல்

வல்லரசு தேசமான அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு என்பது மிகசாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது.

news18
Updated: August 4, 2019, 8:01 AM IST
அமெரிக்க ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழப்பு - 21 வயது இளைஞர் வெறிச்செயல்
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தின் காட்சிகள் (Image: AP)
news18
Updated: August 4, 2019, 8:01 AM IST
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் 21 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இந்த திடீர் தாக்குதலால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர்.

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர் என அம்மாநில கவர்னர் கிரெக் அபார்ட் தெரிவித்துள்ளார். மேலும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 21 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது. எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது தெரியவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.வல்லரசு தேசமான அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு என்பது மிகசாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது. தீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட, இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...