நவம்பர் 8 பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாள்: 2 ஆண்டுகளில் நோக்கம் நிறைவேறியதா?

Demonetisation நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 99.3 விழுக்காடு பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதில், திட்டம் படுதோல்வி என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

news18
Updated: November 8, 2018, 7:56 AM IST
நவம்பர் 8 பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நாள்: 2 ஆண்டுகளில் நோக்கம் நிறைவேறியதா?
பிரதமர் நரேந்திர மோடி
news18
Updated: November 8, 2018, 7:56 AM IST
பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்களுக்கு பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 99.3 விழுக்காடு பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதில், திட்டம் படுதோல்வி என்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி.கிருஷ்ணன். ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பேடிஎம் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள்தான் பலனடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கருப்புப் பணத்தை வங்கியில் முதலீடு செய்தவர்கள் குறித்த விசாரணைத் தொடர்பாக மாபெரும் மவுனமே நிலவுவதாக கூறும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் பிரச்சராத்துக்கு மட்டுமே பயன்படும் என்று விமர்சித்தார்.

Also see...
Loading...
First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்