ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாலையில் நின்ற பெண்களை பாலியல் தொழிலாளி என நினைத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

சாலையில் நின்ற பெண்களை பாலியல் தொழிலாளி என நினைத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

கோப்பு படம்

கோப்பு படம்

காவல்துறையினர் அந்த பெண்கள் வீட்டிற்கு சென்று அவர்களை கைது செய்து மொதிரத்தை மீட்டு அந்த இளைஞரிடம் ஒப்படைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் பாலியல் தொழிலாளி போல நடித்து இளைஞர் ஒருவரின் பைக்கை நிறுத்தி அவரது தங்க மோதிரத்தை கொள்ளையடித்த பெண்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  கடந்த வெள்ளிக்கிழமையன்று, டெல்லி சாவ்லா டோல்கேட் அருகே பெண்கள் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற இளைஞர் ஒருவர், அவர்களை பாலியல் தொழிலாளி என நினைத்து தனது மோட்டர் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது ஒரு பெண் அவர் கழுத்தை பிடித்து மிரட்டிய நிலையில் மற்றொரு பெண் அவர் கையில் இருந்த தங்க மோதிரத்தை உருவியுள்ளார், இருவரும் பின்னர் தப்பி ஓடிவிட்டனர்.

  இந்நிலையில் அந்த இளைஞர், துவாரக செக்டார் 23 காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது காவல்துறையினர், ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட பெண்களில் புகைப்படங்களை காட்டியுள்ளனர். அதில் அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் அந்த இளைஞர் அடையாளம் காட்டிய நிலையில், காவல்துறையினர் அந்த பெண்கள் வீட்டிற்கு சென்று அவர்களை கைது செய்து மொதிரத்தை மீட்டு அந்த இளைஞரிடம் ஒப்படைத்தனர்.

  இதையும் வாசிக்க: போலி நகையை வைத்து தங்க நகையை எடுத்து சென்ற பெண்.. சிசிடிவியில் அம்பலமான கொள்ளை..!

  அந்த பெண்கள் இருவரும் ஏற்கனவே இது போன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டனர் எனவும் இதேபோல் அப்பகுதியில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Arrested, Crime News, Delhi, Gold Robbery, Prostitution