முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் உள்பட மூவர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் உள்பட மூவர் சுட்டுக்கொலை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அதிகாலையில் அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதலில் இறங்கினர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது உதவியாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: Jammu and Kashmir