நீயா, நானா? ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள் தீக்குளித்து மரணம்!

news18
Updated: October 2, 2018, 10:04 PM IST
நீயா, நானா? ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள் தீக்குளித்து மரணம்!
சித்தரிப்புப் படம்
news18
Updated: October 2, 2018, 10:04 PM IST
தெலுங்கானாவில் ஒரே பெண்ணை காதலித்த 2 மாணவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்திலிருந்து சுமார் 190 கி.மீ. தொலைவிலுள்ளது ஜக்தியால். இந்த நகரத்திலுள்ள மிஷனரி பள்ளியில் மகேந்தர் (வயது 16), ரவிதேஜா (வயது 16) ஆகியோர் 10-ம் வகுப்பு படித்தனர். இருவரும் அதே வகுப்பில் படித்த ஒரு பெண்ணை காதலித்துள்ளனர்.

மகேந்தர், ரவிதேஜா இருவருக்குமே தாங்கள் ஒரே பெண்ணை காதலிப்பது அண்மையில் தெரியவந்துள்ளது. இதனால், இருவரும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிறு இரவு அவர்கள் இருவரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.


பின்னர், இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது குறித்து நீண்டநேரமாக விவாதித்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் தற்கொலை செய்ய முடிவுசெய்து ஒருவர் மீது ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர்.

இதில், மகேந்தர் அதே இடத்தில் உயிரிழந்தார். ரவிதேஜாவின் அலறல் சத்தம் கேட்ட சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ரவிதேஜா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடந்தபோது, மற்றொரு மாணவனும் அவர்களுடன் இருந்ததாக மகேந்தர் மற்றும் ரவிதேஜாவின் பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: October 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...