முகப்பு /செய்தி /இந்தியா / பிரசவத்துக்கு மனைவியை அழைத்து சென்ற போது கார் தீப்பிடித்து தம்பதியர் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்

பிரசவத்துக்கு மனைவியை அழைத்து சென்ற போது கார் தீப்பிடித்து தம்பதியர் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்

தீ பற்றி எரிந்த கார்

தீ பற்றி எரிந்த கார்

Kerala Car Fire | கேரளாவில் கார் தீப்பற்றி எரிந்ததில், பிரசவத்திற்கு சென்ற பெண் உட்பட 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரிஜித் (35) இவரது மனைவி ரீஷா (26). மனைவி ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட குடும்பத்தினர் அவரை காரில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். மாருதி எஸ்-பிரஸ்ஸோ ரக காரில் 6 பேர் பயணித்துள்ளனர். பின்னிருக்கையில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் இருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது. மளமளவென பற்றிய தீ, கார் முழுவதும் பரவியது. இதனால் கர்ப்பிணி உட்பட காருக்குள் இருந்த 6 பேர் வெளியே வர முடியாமல் சிக்கினர்.கார் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இருப்பினும் கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கார் தீப்பற்றியதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Kerala