ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் தேர்தல்.. வாக்குவாதம்.. 2 சக துணைப்படை வீரர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஜவான்!

குஜராத் தேர்தல்.. வாக்குவாதம்.. 2 சக துணைப்படை வீரர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஜவான்!

ஜவான்

ஜவான்

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அவர்கள் இங்கு அனுப்பப்பட்டதாக போர்பந்தர் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.சர்மா தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat |

குஜராத்தின் போர்பந்தர் அருகே தேர்தல் பணியில் இருந்த துணை ராணுவ வீரர்கள் சனிக்கிழமையன்று தங்களுக்குள் நடந்த மோதலில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, தேர்தல் பணிப் பேருந்தில் IRB காவலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் சக வீரர் ஒருவர் தன்னுடைய ஏகே 47 துப்பாக்கியால் சுட்டதில் இரு காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகபுரோபந்தர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் உயர் சிகிச்சைக்காக சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள ஜாம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் கான்வாய் மற்றும் பிற பணியாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். போலீஸ் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் கான்ஸ்டபிள் எஸ்.இனௌச்சாசிங் என்றும், கொல்லப்பட்ட இருவர்

ஜவான்கள் தோய்பா சிங் மற்றும் ஜிதேந்திர சிங் என்றும் அடையாளம் காணப்பட்டனர். கான்ஸ்டபிள்கள் சோராஜித் மற்றும் ரோஹிகானா ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மணிப்பூர் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : சர்ச்சை கருத்தால் சிக்கிய பாபா ராம்தேவ்.. 3 நாட்களில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் அவர்கள் இங்கு அனுப்பப்பட்டதாக போர்பந்தர் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.சர்மா தெரிவித்தார்.

போர்பந்தர் மாவட்டத்தில் முதல்கட்டமாக டிசம்பர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. போர்பந்தரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள துக்டா கோசா கிராமத்தில் உள்ள மையத்தில் ஜவான்கள் தங்கியிருந்தனர்.

"சனிக்கிழமை மாலை ஏதோ பிரச்சனைக்காக ஒரு ஜவான் தனது சக ஊழியர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இரண்டு ஜவான்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.அவர்கள் ஜாம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவரின் வயிற்றில் புல்லட் காயம் ஏற்பட்டது, மற்றொன்று அவரது காலில் அடிபட்டது," என்று அதிகாரி ஷர்மா கூறினார்.

First published:

Tags: Assembly Election 2022, Gujarat, Shot dead