ஓசூர் அருகே கிராம மக்களுடன் தகராறு... வடமாநிலத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் கத்தியால் குத்திக் கொலை...

கோப்புப் படம்

ஓசூரில் மத்தியப் பிரதேச இளைஞர்கள் இருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர்.

 • Share this:
  ஓசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமம் அருகே தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அங்கே, வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களில் கஞ்சா புகைத்து போதையில் இருந்த சிலரிடம் அப்பகுதியைச் சேர்ந்த இருவர் பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 6 பேரை கத்தியால் தாக்கியுள்ளனர்.

  400 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் பேரிணைவு இன்று நிகழும்..

  அதில் பிஜேஷ் மற்றும் பிரிஜேஷ் சிங் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: