Home /News /national /

போனில் ஆபாசப் படம் பார்த்து 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 6 மைனர் சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!

போனில் ஆபாசப் படம் பார்த்து 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 6 மைனர் சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!!

குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களில் 3 பேர் 6ஆம் வகுப்பும், மற்ற மாணவர்கள் 7 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களில் 3 பேர் 6ஆம் வகுப்பும், மற்ற மாணவர்கள் 7 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களில் 3 பேர் 6ஆம் வகுப்பும், மற்ற மாணவர்கள் 7 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    பீகாரில் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு படித்து வரும் 6 மாணவர்கள் சேர்ந்து 2 சிறுமிகளை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் போனில் ஆபாசப் படம் பார்த்ததாலே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளது, போலீசார் மற்றும் பெற்றோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு நீண்ட நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் நாட்டில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஒரு சிலபள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கினாலும், பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இன்னும் ஆன்லைன் வகுப்புகளே நடந்து வருகின்றன. இதுபோன்று நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக பள்ளி மாணவர்கள் கையில் ஸ்மார்ட்போன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    ஒருபக்கம் கொரோனா தொற்று காலத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் மாணவர்கள் கல்வி கற்க உதவியாக இருந்தாலும், மறுபக்கம் இது மாணவர்கள் மோசமான பாதைக்கு செல்லவும் வழிவகுத்து வருகிறது. இந்த மொபைல் போன்கள் மூலம் சிறுவர்கள் ஆபாசப் படங்களை பார்க்கும் போக்கு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவும் துணிகின்றனர்.

    Also Read: கணவனின் சித்தி மகனுடன் மனைவி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்

    இதுபோல மொபைல் போனை தவறாக பயன்படுத்துவதன் விளைவாக பீகாரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரின் சேக்புரா மாவட்டத்தை சேர்ந்த 6 பள்ளி மாணவர்கள் 2 சிறுமிகளை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், பெரும் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், மொபைல் போனில் ஆபாசப் படம் பார்த்தே அந்த சிறுவர்கள் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் போலீசாரையும் அந்த சிறுவர்களின் பெற்றோர், உறவினர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    பீகாரின் பார்பிஹா காவல்நிலையத்தின் கீழ் இந்த குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றச் செயலில் ஈடுபட்ட சிறுவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்தே குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில், கூட்டப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள் மாநிலத்தில் அரசுப் பள்ளியில் 6 மற்றும் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களில் 3 பேர் 6ஆம் வகுப்பும், மற்ற மாணவர்கள் 7 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாணவர்களும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் ஒரு சிறுவன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஆவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

    தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களே அந்த மாணவனை பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சிறுவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆபாசப் படம் பார்த்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, குற்றச்செயலில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பார்பிஹா காவல்நிலையத்தை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஜெய்சங்கர் மிஸ்ரா கூறும்போது, சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது நிலத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவர்கள் இந்த சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த சிறுமிகளின் கையில் அவர்கள் பணத்தையும் கொடுத்து, வெளியில் இதுதொடர்பாக யாரிடமும் வாய் திறக்க கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

    எனினும், வேதனை தாங்காத சிறுமிகள் வீட்டிற்கு சென்றதும் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, சத்தீஸ்கார் மாநிலத்திலும் இதேபோன்ற சம்பவம் பதிவாகியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் அம்பிகாபூர் பகுதியிலும் இதேபோன்ற ஆபாசப் படம் பார்த்து சிறுவர்கள் 8 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் 6 முதல் 13 வயதுடைய சிறுவர்கள் ஆவார்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Crime News, Gang rape, Rape

    அடுத்த செய்தி