செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 எம்பிஏ பட்டதாரிகள்.. போலீசாரிடம் பிடிபட்டது எப்படி?

செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 எம்பிஏ பட்டதாரிகள்.. போலீசாரிடம் பிடிபட்டது எப்படி?

செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த நண்பர்களான 2 எம்பிஏ பட்டதாரிகளை வாராங்கல் பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  இதுதொடர்பாக தெலுங்கானா மூத்த போலீஸ் அதிகாரி தருண் ஜோஷி கூறும்போது, எம்பிஏ பட்டதாரிகளான இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். ஒருவர் பான் கடை நடத்தி வருகிறார். மற்றொருவர் மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

  இந்நிலையில், இருவரும் தங்களது வருமானத்திற்கு மீறி ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளனர். மேலும், மதுபோதைக்கும் அடிமையாகியுள்ளனர். இதனால், ஒருகட்டத்தில் தங்களது செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இருவரும் திணறியுள்ளனர்.

  Also read: 133 வருட பழமையான பள்ளியை தத்தெடுத்த நடிகருக்கு குவியும் பாராட்டு!

  இதைத்தொடர்ந்து, விரைவில் பணம் சம்பாதிக்க செயின் பறிப்பில் ஈடுபடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இருவரும் கிரமாப்புறங்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்துள்ளனர். சாலைகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களின் கழுத்தில் இருந்து செயின்களை பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

  இதனிடையே, சம்பவத்தன்று, வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபடுவதை கண்டு தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து, மூன்று தங்கச்சங்கிலிகள் மற்றும் இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: