ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாய் கடித்து பெண் படுகாயம்... ராட்வீலர், பிட்புல் உட்பட 11 வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம்

நாய் கடித்து பெண் படுகாயம்... ராட்வீலர், பிட்புல் உட்பட 11 வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதித்த நீதிமன்றம்

நாய் கடித்த பெண்ணுக்கு 2 லட்சம் இழப்பீடு

நாய் கடித்த பெண்ணுக்கு 2 லட்சம் இழப்பீடு

நாயின் உரிமையாளர் தடைசெய்யப்பட்ட டோகோ அர்ஜென்டினோ நாய் இனத்தை செல்லப்பிராணியாக வைத்திருந்து நாட்டின் சட்டத்தையும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளையும் அப்பட்டமாக மீறியுள்ளார் .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gurgaon, India

  ஆகஸ்ட் மாதம் வீட்டு நாய் ஒன்று தாக்கி காயமடைந்த பெண்ணுக்கு ₹ 2 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு குருகிராம் மாநகராட்சிக்கு (எம்சிஜி) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது .

  பாதிக்கப்பட்ட முன்னி என்பவர், குருகிராமில் வீட்டு உதவியாளராகப் பணிபுரிகிறார். ஆகஸ்ட் 11 அன்று,  அவர் தனது மைத்துனருடன் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​வினித் சிக்காரா என்பவரது நாயால் தாக்கப்பட்டார். அதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர், குருகிராமில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  பாதிக்கப்பட்டவர் சார்பாக, வழக்கறிஞர் சந்தீப் சைனி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் கீழ் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு புகாரை தாக்கல் செய்தார், அதில் ₹ 20 லட்சம் இழப்பீடு கோரப்பட்டது.

  இதையும் படிங்க: 22,000 லிட்டர் பெட்ரோல்.. லைட்டரால் தீப்பற்றிய டேங்கர் லாரி - உயிரிழந்த 11 பேர்!

  சிவில் லைன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரில், அந்த நாயின் இனம் 'பிட்புல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், இது 'டோகோ அர்ஜென்டினோ' இனம் என உரிமையாளர் தெரிவித்தார்.

  நுகர்வோர் குறைதீர் மன்றம் குருகிராம் மாநகராட்சிக்கு நாயை உடனடியாக அவர்களது காவலில் எடுக்கவும் சிகாராவின் நாய்கள் வைத்திருக்கும் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும், 11 வெளிநாட்டு நாய் இனங்களை தடை செய்யுமாறும் அறிவுறுத்தியது. அதோடு மூன்று மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கான கொள்கையை வகுக்க குருகிராம் மாநகராட்சிக்கு மன்றம் உத்தரவிட்டது.

  மற்றவர்களின் வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்து வரும் மிகவும் ஏழ்மையான பெண் எனக் கூறப்படும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குருகிராம் மாநகராட்சி மூலம் இடைக்கால நிவாரணமாக ₹ 2 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க:  சூரியனில் நெளியும் மர்ம சூரியப் பாம்பு... விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ!

  "நாயின் உரிமையாளர் தடைசெய்யப்பட்ட டோகோ அர்ஜென்டினோ நாய் இனத்தை செல்லப்பிராணியாக வைத்திருந்து நாட்டின் சட்டத்தையும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளையும் அப்பட்டமாக மீறியுள்ளார் . எனவே மாநகராட்சி  அந்த நாயின் உரிமையாளரிடம் இருந்து ₹ 2 லட்சம் வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  25.4.2016 தேதியிட்ட இந்திய அரசின் அறிவிப்பின்படி, 15.11.2022 முதல் அமெரிக்க பிட்-புல் டெரியர்கள், டோகோ அர்ஜென்டினோ, ராட்வீலர், நியோபோலிடன் மாஸ்டிஃப், போயர்போல் ,பிரெசா கனாரியோ, வுல்ப் நாய், பந்தோக், அமெரிக்கன் புல்டாக், ஃபிலா பிரேசிலிரோ மற்றும் கேன் கோர்சோ போன்ற வெளிநாட்டு இன நாய்கள் தடை செய்யப்படுவதாக நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

  உடனடியாக மேற்கோள் காட்டப்பட்ட இனங்களை வைத்திருப்பதற்காக நாய் உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தால், அனைத்து உரிமங்களையும் ரத்து செய்து, மேற்கூறிய நாய்களை அதன் காவலில் எடுக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Dog, Gurgaon S07p09